காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று, விவசாயிகளில் ஒருவர் கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து அகோரி போல வேடமிட்டு இருந்தார். அவரிடம், போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த போராட்டம் பற்றி விவசாயிகள் கூறுகையில், ‘பிரதமர் மோடி விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். ஆனால் அகோரிகளை சந்திக்கிறார். எனவேதான் அகோரி மூலம் பிரதமருக்கு கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்புகிறோம்’ என்றனர். போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது அய்யாக்கண்ணு போலீசாரிடம் ‘நாங்கள் தற்போது 6–வது முறையாக கைது ஆகிறோம். கைது செய்து அன்று இரவே எங்களை விட்டு விடுகிறீர்கள். எனவே, இந்த முறையாவது எங்களை நீதிமன்ற காவலில் வையுங்கள்’ என்று முறையிட்டார். நேற்று அவர்களது போராட்டம் 78–வது நாளை எட்டியது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் 78வது நாள்

Leave a Reply