சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை கடந்த 2015 – 2016-ம் ஆண்டு வரை நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் நாகரீகம், 5000-த்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் என முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக்குழவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்துடனும் முழுமையாக இந்த ஆய்வை நடத்தி வந்தார். ஆனால், அமர்நாத் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, புது அதிகாரி மூன்றாம் கட்ட ஆய்வை நடத்தினார். தமிழர்களின் தொன்மையைக் கூறும் கீழடி அகழாய்வு ஆராய்ச்சியை திட்டமிட்டே பாதியில் நிறுத்தும் நோக்கோடு செப்டம்பர் 30-ம் தேதி ஆராய்ச்சியை முடித்துள்ளனர். அந்த மூன்றாம் கட்ட ஆய்வுதான் கடந்த 30-ம் தேதி முடிவடைந்தது. நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா? நடக்காதா? என்கிற எண்ணம் சமூக ஆர்வலர்களிடையே உதித்துள்ளது. ‘110 ஏக்கரிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் அதிகாரி வரவேண்டும். அப்போது தான் நாங்கள் நிலம் கொடுப்போம்’ என்று விவசாயிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.
முடங்கிய கீழடி

Leave a Reply