சிக்கிம் மாநில மக்கள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் நீண்டகாலமாகவே விவசாயம் செய்து வருகின்றனர். சிக்கிம் மாநில விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அம்மாநில அரசு இயற்கை விவசாய திட்ட மேம்பாட்டு நிறுவனம் என்ற தனி அமைப்பை உருவாக்கி, தோட்டக்கலை துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்து வருகிறது. இதன் விளைவாக, 24,000 விவசாயிகளும், 24 விவசாய அமைப்புகளும் இணைந்து முதல் ஆண்டிலேயே 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர். விவசாயிகள் விளைவித்த காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கவும், அவர்களுக்கு தேவையான விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுத்து வருகிறது அம்மாநில அரசு.
இயற்கை விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் சிக்கிம்

Leave a Reply