உணவில் சேர்த்துக்கொள்ளவும், மருந்தாகவும், அழகுசாதனத்திற்கும் பயன்படும் குங்குமப்பூ விளைச்சல் மிகப்பெரும் வீழ்ச்சியில் உள்ளது. காஷ்மீரில் நீண்ட காலமாக நிலவும் வறட்சியான காலநிலையால் குங்குமப்பூவைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். போதுமான அளவு மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஆளவு குங்குமப்பூவின் உற்பத்தி 90% குறைந்துள்ளது.
இதனால் ஆப்பிள், வால்நட், பூண்டு போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறும் நிலை குறித்து பரீசிலித்து வருகின்றனர். ஏழு வருடங்களுக்கு முன் அரசு அறிமுகப்படுத்திய தெளிப்பான் பாசனத் திட்டமும் (sprinkler irrigation project) பலன் தருவதில்லை. கிணறுகளும் வறண்டிருப்பதால் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்க முடிவதில்லை.
Leave a Reply