அன்னை அருள் அறக்கட்டளையுடன் இணைந்து பூவுலகின் நண்பர்கள் இணைந்து வெளியிட்டுள்ள மேசை நாட்காட்டி, சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது.
சென்னைப் புத்தகக் காட்சியின் சிறப்பு வெளியீடாக பூவுலகின் நண்பர்களின் சிறப்பு நாட்காட்டி “அருகி வரும் தமிழக உயிரினங்கள்” எனும் பெயரில் வெளியாகிறது. ரூ 500க்கு நூல்கள் வாங்குவோருக்கு இந்நாட்காட்டி விலையில்லாமல் தரப்படும்.
இவ்வுலகில் வாழும் பாலூட்டிகளில் நான்கில் ஒன்றும், பறவைகளில் எட்டில் ஒன்றும் இன்றைக்கு அழிவின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. தமிழ் நிலத்தில் செழித்திருந்த சிங்கம்,சிவிங்கிப்புலி, கானமயில் ஆகியவற்றை நாம் தொலைத்து விட்டோம். பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள், நம் கண் முன்னாலேயே அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இப்படி தமிழகம் ஏற்கெனவே இழந்துவிட்ட உயிரினங்களின் பட்டியல் நீளமானது. சிங்கவால் குரங்கு என்று அறியப்படும் சோலை மந்தி, தமிழக மாநில விலங்கான வரையாடு உள்ளிட்ட பல உயிரினங்கள் தற்போது அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நாட்காட்டியில் அப்படிப்பட்ட முக்கிய உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன.
ஓர் உயிரினம் அற்றுப்போகும் முன் பாதுகாப்பது நம் அனைவரின் கையில்தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அருகி வரும் பன்னிரெண்டு உயிரினங்களைத் தொகுத்து பன்னிரெண்டு மாத நாட்காட்டியை பூவுலகின் நண்பர்கள் அறிமுகப்படுத்துகிறது.
சென்னைப் புத்தகக் காட்சியில் இந்நாட்காட்டி தனியாக விற்பனைக்கு இல்லை. ரூ 500 க்கு நூல்கள் வாங்குவோருக்கு இந்நாட்காட்டி விலையில்லாமல் தரப்படும்.
குறைவான பிரதிகளே உள்ளன. உங்கள் நாட்காட்டிக்கு முந்துங்கள். கடை எண் 290ல் ஓயஸிஸ் அரங்கில் கிடைக்கும். புத்தகக் காட்சி, இன்றே கடைசி நாள். உங்கள் பிரதிக்கு இன்றே முந்துங்கள்.
Leave a Reply